• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

டெல்லி கார் வெடிப்பு: கார் எங்கிருந்து வந்தது? உரிமையாளர் யார்? விடை தெரியாத கேள்விகள்

Byadmin

Nov 11, 2025


டெல்லி கார் வெடிப்பு: சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பிரதமர் மோதி பேச்சு

பட மூலாதாரம், ANI

டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக பிரதமர் மோதி பேசியுள்ளார். தற்போது இரண்டு நாள் பயணமாக பூடானுக்குச் சென்றுள்ளார் மோதி.

இந்தச் சம்பவம் பற்றி முதல்முறையாக பேசியுள்ள மோதி, இதன் பின்னால் உள்ள ‘சதிகாரர்கள்’ தப்பிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தனது உரையின்போது ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறிய மோதி, “இதற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.” எனத் தெரிவித்தார்.

“நேற்று இரவு முழுவதும் இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இந்தச் சதித் திட்டத்தை நமது அமைப்புகள் ஆழம் சென்று விசாரிப்பார்கள்.” எனத் தெரிவித்தார்.

டெல்லி கார் வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.

By admin