• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

டெல்லி குண்டுவெடிப்பு | அனைத்து கோணங்களிலும் விசாரணை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்  | Investigation from all angles: Amit Shah

Byadmin

Nov 12, 2025


புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் நேற்று முன்​தினம் மாலை​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம், நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்த சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்​தனர்.

இதுதொடர்​பாக ‘எக்​ஸ்’ தளத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில், “டெல்லி குண்​டு​வெடிப்பு உயி​ரிழப்​பால் எனக்கு ஏற்​பட்ட வேதனையை வார்த்​தைகளால் விவரிக்க இயலாது. அன்​புக்​குரிய​வர்​களை இழந்​தவர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்துக் கொள்கிறேன். குண்​டு​வெடிப்பு நடந்த இடத்தைப் பார்​வை​யிட்​டேன், காயம் அடைந்​தவர்​களை மருத்​து​வ​மனை​யில் சந்​தித்​தேன். அவர்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​திக்​கிறேன். இந்த சம்​பவம் குறித்து உயர் அமைப்​பு​கள் முழு வீச்​சில் விசா​ரித்து வரு​கின்​றன. அவை இதுகுறித்து ஆழமாக ஆரா​யும்’’ என்று கூறி​யுள்​ளார்.

குண்​டு​வெடிப்​பில் ஏற்​பட்ட உயி​ரிழப்​புக்கு பிரதமர் நரேந்​திர மோடி​யும் இரங்​கல் தெரி​வித்​தார். சம்பவ இடத்​தில் என்​எஸ்​ஜி, டெல்லி காவல்​துறை, எப்​எஸ்​எல் உள்​ளிட்ட பல்​வேறு அமைப்​பு​கள் தற்​போது விசா​ரணை நடத்தி வரு​கின்​றன.

முன்​ன​தாக அமைச்​சர் அமித் ஷா கூறுகை​யில், “டெல்லி செங்​கோட்டை அரு​கில் உள்ள சுபாஷ் மார்க் சிக்​னலில் ஹுன்​டாய் ஐ20 காரில் குண்​டு​வெடிப்பு நிகழ்ந்​தது. இதுபற்​றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்​களுக்​குள், டெல்லி குற்​றப்​பிரிவு மற்​றும் சிறப்பு பிரிவு குழுக்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்​தன. டெல்லி காவல்​ துறை ஆணை​யர் மற்​றும் சிறப்பு பிரிவு பொறுப்​பாளரிடம் நான் பேசினேன். அவர்​கள் சம்பவ இடத்​தில் உள்​ளனர். அனைத்து கோணங்களிலும் வி​சா​ரணை மேற்​கொள்​வோம்​” என்​று கூறி​யிருந்​தார்​.



By admin