டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 60.39% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது
இந்தத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமாக 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா 70 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பாஜக 68 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது? ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 36.
காலை 8.45 மணி நிலவரப்படி முன்னிலை நிலவரம்.
ஆம் ஆத்மி- 22
காங்கிரஸ் – 1
டெல்லியில் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களையும் வென்றது.
இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக முன்னிலை வகிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்தால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும். கடந்த பத்தாண்டுகளில், டெல்லி மற்றும் பஞ்சாபில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததன் மூலம், ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்