• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி சட்டமன்ற வளாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கார் – மர்ம நபரால் பரபரப்பு

Byadmin

Apr 6, 2026


டெல்லி சட்டசபை வளாகத்திற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றில் வந்த நபர், மதியம் 2 மணியளவில் சட்டசபை வளாகத்தின் 2-வது நுழைவு வாயில் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற அந்த நபர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அங்கிருந்த வரவேற்பு பகுதிக்கு அருகே ஒரு பூங்கொத்தை வைத்துவிட்டு, உடனடியாக அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

By admin