• Fri. Oct 11th, 2024

24×7 Live News

Apdin News

டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை – அதிஷி, அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன்?

Byadmin

Oct 11, 2024


டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை

பட மூலாதாரம், @AtishiAAP

படக்குறிப்பு, பொதுப்பணித்துறை தன்னை அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றியதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். அதிஷி இத்துறையின் அமைச்சராகவும் உள்ளார்.

டெல்லியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தங்கியிருந்த ‘6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை’ இல்லம் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி அரவிந்த் கேஜ்ரிவால் இந்த வீட்டை காலி செய்தார், அதன் பிறகு அதிஷி அங்கு வசிக்கச் சென்றார். ‘6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை’ இல்லத்தில் இருந்து முதல்வர் அதிஷி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக, இப்போது டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

வியாழக்கிழமை, டெல்லி முதல்வர் அலுவலகம் அதிஷியின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதில் தனது தனிப்பட்ட வீட்டில் கோப்புகளில் கையெழுத்திடுகிறார் அதிஷி. அவரைச் சுற்றி பேக் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

துணைநிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

By admin