• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

டெஸ்லாவில் ஒரு டிரில்லியன் டாலர் சம்பாதிக்க ஈலோன் மஸ்க் என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Nov 8, 2025


ஈலோன் மஸ்கின் சம்பள உயர்வு ஒரு டிரில்லியன் டாலரா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லில்லி ஜமாலி & ஆஸ்மண்ட் சியா
    • பதவி, வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர் & தொழில்துறை செய்தியாளர்

ஈலோன் மஸ்குக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய வெகுமதியை வழங்குவதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்

இந்த முன்னறிவிப்பில்லாத திட்டத்தை அங்கீகரித்து 75% பேர் வாக்களித்துள்ளனர். அதோடு, வியாழக் கிழமையன்று நடந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இது பெரும் கைத்தட்டல்களையும் பெற்றுள்ளது.

ஏற்கெனவே உலகின் மிகப்பெரிய பணக்காரரான மஸ்க், பத்து ஆண்டுகளில் மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் சந்தை மதிப்பைக் கடுமையாக உயர்த்த வேண்டும். அவர் அதைச் செய்து காட்டுவதோடு, மேலும் பல்வேறு இலக்குகளை அடைந்தால், அவருக்கு நூற்றுக்கணக்கான மில்லியன்கள் அளவிலான புதிய பங்குகள் வெகுமதியாகக் கிடைக்கும்.

இந்தத் தொகை கணிசமான விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது. ஆனால், இது அங்கீகரிக்கப்படாவிட்டால் ஈலோன் மஸ்க் நிறுவனத்தை விட்டு வெளியேறக்கூடும் என்பதாலும், அவரை இழக்க முடியாது என்பதாலும், இதற்கு ஒப்புதல் அளித்ததாக டெஸ்லா நிறுவன பங்குதாரர்கள் தரப்பு வாதிட்டது.

ஒரு டிரில்லியன் டாலர் பெற ஈலோன் மஸ்க் என்ன செய்ய வேண்டும்?

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டெக்சாஸின் ஆஸ்டினில் சுற்றிலும் மக்கள் தனது பெயரைக் கூக்குரலிட மேடையேறிய மஸ்க் நடனமாடினார்.

By admin