• Mon. Sep 15th, 2025

24×7 Live News

Apdin News

டெஹ்ரானின் பூஜ்ஜிய நாள்: இரான் தலைநகரில் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு கோடி மக்கள்

Byadmin

Sep 15, 2025


டெஹ்ரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் நீர் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடிய ஒருவர் கையில், ‘எச்சரிக்கை: குடிக்கத் தகுதியற்ற நீர்’ என்று எழுதப்பட்ட பாட்டில்.

“தண்ணீர் குறைப்பு மற்றும் நீர் அழுத்தத்தில் கடுமையான சரிவு காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் விரைவாக தீர்ந்துவிடுகிறது அல்லது சுத்தமாக தண்ணீர் கிடைப்பதே இல்லை,” என்று டெஹ்ரானில் வசிக்கும் ஒருவர் பிபிசி நியூஸ் பெர்சியனிடம் தெரிவித்தார்.

“மின்சாரம் துண்டிக்கப்படும்போது, இணையம் மற்றும் லிஃப்ட்-களும் வேலை செய்வதை நிறுத்தி விடுகின்றன…

“நிலைமை தாங்க முடியாததாகிவிடுகிறது, குறிப்பாக கோடை காலத்தில், கடுமையான காற்று மாசுக்கு மத்தியில். வீட்டில் ஒரு குழந்தை அல்லது வயதானவர் இருந்தால், அது இன்னும் மோசமானது, ஏனெனில் சில நேரங்களில் அவர்கள் இந்த நிலைமைகளை பல மணி நேரம் தாங்க வேண்டியிருக்கிறது,” என்று தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத அந்த பெண்மணி கூறினார்.

இரான் முழுவதும், நீர் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு ஆகியவை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் விரக்திக்கு வழிவகுத்துள்ளன. .

By admin