• Wed. Oct 2nd, 2024

24×7 Live News

Apdin News

டேவிட் ஸ்லிங்: இஸ்ரேலை ஏவுகணை தாக்குதலில் இருந்து காக்கும் மந்திரக்கோல் – எவ்வாறு செயல்படும்?

Byadmin

Oct 2, 2024


இஸ்ரேல், டேவிட் ஸ்லிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு

டெல் அவிவ் நகரில் உள்ள மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீது ஹெஸ்பொலா கடந்த புதன்கிழமையன்று ஏவிய ஏவுகணை, இரானால் தயாரிக்கப்பட்ட காதிர்-ஒன் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.

இந்த ஏவுகணை 700 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லக்கூடியது மற்றும் முழு கட்டடத்தையும் அழிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

டேவிட் ஸ்லிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டிருப்பதால் ஹெஸ்பொலாவின் இந்தத் தாக்குதலை தடுப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றதாக இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மெயின்சர் தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது இரான் நேற்றிரவு பேலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய தாக்குதலை முறியடிப்பதிலும் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரான் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் இஸ்ரேலின் அயர்ன் டோம் மற்றும் அமெரிக்காவுடன் டேவிட் ஸ்லிங் அமைப்பும் திறம்பட செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

By admin