• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

டைனோசரை சிறுகோள் அழித்த காலத்தில் பூமியில் பேரழிவை ஏற்படுத்திய மற்றொரு பொருள் – என்ன நடந்தது?

Byadmin

Oct 7, 2024


சிறுகோள். டைனோசர், பூமி, இயற்பியல், விண்வெளி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரெட்டேசியஸ் காலத்தில் ஏற்பட்ட பேரழிவு நிகழ்விலிருந்து டைனோசர்களால் உயிர் பிழைக்க முடியவில்லை

டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள் (Asteroid) ஒன்று. ஆனால் அந்த ஒரு சிறுகோள் மட்டும் பூமியைத் தாக்கவில்லை, குறுகிய கால இடைவெளியில் மற்றொரு சிறுகோளும் பூமியில் மோதியுள்ளது என்று விஞ்ஞானிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சிறுகோள் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் கடலில் விழுந்துள்ளது. இதனால் அப்போது ஒரு மிகப்பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சென்றிருக்கக் கூடிய, குறைந்தபட்சம் 800 மீட்டர் உயரமுள்ள சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு ‘பேரழிவு நிகழ்வாக’ இருந்திருக்கும்.

“இந்த நிகழ்வு 450-500 மீட்டர் அகலம் கொண்ட நாதிர் (Nadir) என்ற பள்ளத்தை உருவாக்கியது. இந்த சிறுகோள் மணிக்கு 72,000 கிமீ வேகத்தில் பூமியில் மோதியதாக நம்பப்படுகிறது.”

By admin