டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதால் ஈலோன் மஸ்கிற்கு என்ன பலன்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரபல தொழிலதிபரும் உலகின் முன்னணி பணக்காரருமான ஈலோன் மஸ்க், பல மில்லியன் டாலர்களையும் செலவழித்துள்ளார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் மஸ்க் அடையக்கூடும் பலன்கள் என்ன?
அரசாங்கத்தின் செலவீனங்களை குறைப்பதற்காக மஸ்கை தனது நிர்வாகத்துக்குள் அழைப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே, டிரம்பின் அமைச்சரவையில் மஸ்க் இடம்பெற வாய்ப்பு அதிகம்.
மேலும், அரசாங்க செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் தனது ஸ்பேஸ் எக்ஸ் மூலமும் மஸ்க் பலன் அடையக் கூடும்.
பெண்டகனை போல் ஸ்பேஸ் எக்ஸும் உளவு செயற்கைக்கோள்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் அவற்றில் முதலீடு செய்யத் தயாராக உள்ளன.
கார்ப்பரேட் மற்றும் செல்வ வரியை குறைப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார். இதுவும் மஸ்கிற்கு சாதகமாக அமையும்.
டிரம்ப் வெற்றி பெற்றதுமே மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 12% வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.