டொனால்ட் டிரம்ப்: அவரது பின்னணி என்ன? அரசியலுக்கு வந்தது எப்படி?
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.
இதில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கு முன் அவர் அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவதாக உறுதியளித்து 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிபரானார்.
அவரது ஆட்சிக் காலம் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. அவர் முக்கியமான காலநிலை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து விலகினார். சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார். வட கொரிய அதிபருடன் கை கோர்த்தார். மத்திய கிழக்குப் பகுதியில் உறவுகளை மாற்றியமைத்தார்.
அவர் எப்படி அமெரிக்க அரசியலில் இவ்வளவு சக்தி வாய்ந்த நபராக மாறினார்? இம்முறை மீண்டும் அவர் அதிபர் ஆவாரா? முமுழு விவரங்கள் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.