டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா, சீனா உறவு எப்படி இருக்கும்?
கடந்த நான்கு ஆண்டுகால பைடன் ஆட்சியில் அமெரிக்கா – சீனா உறவு சிறு சிறு விரிசல்களை கண்ட போதிலும் பெரிதாக மோசமடையவில்லை. ஆனால் டிரம்பின் முதல் ஆட்சிக் காலம் அப்படி இல்லை.
டிரம்பின் முந்தைய ஆட்சியில் சீனாவை போட்டியாளர் என டிரம்ப் அழைத்தார். அதுமட்டுமல்லாமல் பெருந்தொற்று காலத்தின்போது கோவிட்டை சீன வைரஸ் என்று டிரம்ப் கூறியதில் இருநாட்டு உறவும் மோசமடைந்தது.
இந்த தேர்தல் பிரசார சமயத்தில் சீன இறக்குமதிகளுக்கு 60 சதவீத அளவில் வரி விதிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். எனவே டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் இருநாட்டு உறவும் உறுதியானதொரு உறவாக இருக்குமா என ஆய்வாளர்கள் சந்தேகின்றனர்.
ஆனால் அமெரிக்காவில் அமையப் போகும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் பெருவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு இடையே சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அமெரிக்காவின் புதிய அரசுடன் பணிபுரிய சீனா தயாராக இருப்பதாகவும் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு