• Mon. Jan 20th, 2025

24×7 Live News

Apdin News

டொனால்ட் டிரம்ப்: இந்தியா, சௌதி அரேபியா மற்றும் உலகிற்கு டிரம்பின் 2-வது ஆட்சியின் தாக்கம் எப்படி இருக்கும்?

Byadmin

Jan 20, 2025


அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவுடைய அதிபரின் பதவிக்காலம், அந்த நாட்டின் கொள்கைகளில் மட்டுமல்ல, உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் பொருளாதாரக் கொள்கைகள் முதல் ராஜ்ஜீய முடிவுகள் வரை எதிரொலிக்கின்றன.

ஜனவரி 20ஆம் தேதி (இன்று) டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகத் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்குவார். ஜே.டி.வான்ஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

டிரம்ப் பெரும்பாலும், ‘கணிக்க முடியாதவர்’ என்றே கருதப்படுகிறார். அதாவது, எந்தவொரு பிரச்னையிலும் அவரது நிலைப்பாட்டை முன்கூட்டியே கணிக்க முடியாது. சிலர் இதை அவருடைய பலமாகக் கருதுகிறார்கள். மற்றவர்கள் அதை ஒரு பலவீனமாகப் பார்க்கிறார்கள்.

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கவுள்ள, இந்த நேரத்தில், அவரது முதல் பதவிக் காலத்தில் இருந்ததைவிட உலகம் நிறைய மாறிவிட்டது. பல புதிய சவால்கள் உருவாகியுள்ளன.



By admin