• Sat. Dec 28th, 2024

24×7 Live News

Apdin News

டொனால்ட் டிரம்ப்: கனடாவை அமெரிக்க மாகாணமாக மாற்ற விரும்புவது ஏன்? கனடாவின் பதில் என்ன?

Byadmin

Dec 28, 2024


டிரம்ப், ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் கனடாவின் இறையாண்மைக்கு தொடர்ந்து சவால் விடுகிறார், ஆனால் ட்ரூடோ அமைதியாக இருக்கிறார்

காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியபோது, அந்த விவகாரத்தை ​​கனடாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாக ட்ரூடோ கருதினார்.

கனடாவின் இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று ட்ரூடோ கூறியிருந்தார். ஆனால், அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, கனடாவின் இறையாண்மைக்கு வெளிப்படையாக சவால் விடுக்கிறார். இருப்பினும் ட்ரூடோ அமைதி காத்து வருகிறார்.

கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் என்றும் ட்ரூடோ அதன் ஆளுநர் என்றும் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். ஆனால், இதற்கு ட்ரூடோ ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

புதன்கிழமையன்று டிரம்ப் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தபோது மீண்டும் அவரை கனடாவின் ஆளுநர் என்று அழைத்தார்.

By admin