• Fri. Dec 27th, 2024

24×7 Live News

Apdin News

டொனால்ட் டிரம்ப்: கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? சீனாவை சமாளிக்க அது உதவுமா?

Byadmin

Dec 26, 2024


டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரிசோனாவில் நடைபெற்ற மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், யுக்ரேன் போர் போன்ற வெளிநாட்டு மோதல்களில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தக கூட்டாளிகளின் மீதான வரிகளை அதிகரிப்பது, உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தினார்.

ஆனால் சமீபத்திய நாட்களில் அவர் தனது வெளியுறவுக் கொள்கையில் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையைப் பரிந்துரைத்துள்ளார்.

முதலில், கனடா கூடுதலான ஒரு அமெரிக்க மாகாணம் என்று டிரம்ப் கேலி செய்தார். அடுத்ததாக, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை திரும்பப் பெறப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.

டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், விற்பனைக்கு இல்லாத தன்னாட்சி டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை வாங்க விரும்பினார். அந்த விருப்பதைத் தற்போது மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

By admin