• Thu. Nov 7th, 2024

24×7 Live News

Apdin News

டொனால்ட் டிரம்ப் 2020 தோல்வியில் இருந்து மீண்டு வந்து 2-வது முறையாக வெற்றி பெற்றது எப்படி?

Byadmin

Nov 7, 2024


டொனால்ட் டிரம்ப் - அமெரிக்க அதிபர் தேர்தல் -அமெரிக்கா - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரா ஸ்மித்
  • பதவி, வட அமெரிக்க ஆசிரியர்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பு மிக்க மீள்வரவாக (comeback) பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் டிரம்ப் அதிபராக இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார்.

அவரது தேர்தல் பிரசாரமும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. அதில் அவர் இரண்டு கொலை முயற்சிகளில் இருந்து தப்பினார். அவரது போட்டியாளரான தற்போதைய அதிபர் ஜோ பைடன் தேர்தல் நாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் உள்ள மக்கள் பொருளாதாரம் மற்றும் குடியேற்ற பிரச்னையை ஒரு முக்கிய கவலையாகக் குறிப்பிட்டு வந்தனர். அங்கு உள்ள பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர்.

By admin