• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

டொனெட்ஸ்க் பகுதியை விட்டுக்கொடுத்தால் யுக்ரேனுக்கு என்ன பேராபத்து?

Byadmin

Aug 21, 2025


 ட்ரோன் எதிர்ப்பு வலைகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சாலையில் அமைக்கப்பட்ட டிரோன் எதிர்ப்பு வலைகள்

அலாஸ்காவில் நடந்த சந்திப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள பகுதிகளை யுக்ரேன் ஒப்படைத்தால், தற்போதைய போர் முனைப் பகுதியில் போரை நிறுத்த விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டொனெட்ஸ்க் மற்றும் அதற்கு அருகிலுள்ள லுஹான்ஸ்க் பகுதிகள் மோதலின் மையமாக இருந்துள்ளன.

கடுமையான மோதலுக்குப் பிறகு, டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தலைநகரம் உட்பட, சுமார் 70% பகுதியை ரஷ்யா தற்போது கட்டுப்படுத்தி வருகிறது.

டொனெட்ஸ்க் முழுவதையும் ரஷ்யா கைப்பற்றினால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத அதன் உரிமை கோரல் வலுவடையும். அதே நேரத்தில், பெரிய ராணுவ இழப்புகளைத் தவிர்க்கவும் அது உதவும்.

By admin