• Tue. May 13th, 2025

24×7 Live News

Apdin News

டொவினோ தோமஸ் – சேரன் இணைந்து நடித்திருக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Byadmin

May 13, 2025


தென்னிந்திய சினிமாவின் திறன்மிகு நட்சத்திர முகங்களாக பிரபலமான டொவினோ தோமஸ்,  இயக்குநர் சேரன், சுராஜ் வெஞ்சரமூடு, ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்து நடித்திருக்கும் ‘ நரி வேட்டை ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அனு ராஜ் மனோகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நரி வேட்டை’.  இதில் டொவினோ தோமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார் இன்வெஸ்டிகேட் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இந்தியன் சினிமா கம்பனி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியாகி ரசிகர்களின் பரவலான கவனத்தை கவர்ந்திருக்கிறது .

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதியன்று தமிழ் மற்றும் மலையாள மொழியில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்குநரும் , நடிகருமான சேரன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இப்படத்திற்கு உலக தமிழர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

By admin