மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான டொவினோ தோமஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நரி வேட்டை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மின்னலென’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அனு ராஜ் மனோகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நரி வேட்டை’ எனும் திரைப்படத்தில் டொவினோ தோமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இந்தியன் சினிமா கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திப்புசான் – சியாஸ் ஹாசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற’ கண்ணோடு கண்களை கண்டநொடி…’ என தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத பின்னணி பாடகர் அகில் ஜே.சந்த் மற்றும் பின்னணி பாடகி காயத்ரி ராஜீவ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்தப் பாடலின் வரிகளும், இசையும் அதற்கான காட்சிகளும் இளம் இரசிகர்களை குறிப்பாக காதலித்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
The post டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.