• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

ட்விட்டர் நீல நிற பறவை ஏலத்திற்கு வருகிறது!

Byadmin

Mar 19, 2025


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வந்த ‘ட்விட்டர்’ நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, ‘எக்ஸ்’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.

அதன் பிறகு எக்ஸ் தளத்தின் இலச்சினை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை அவர் செய்தார்.

இந்நிலையில், ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோகிராம் எடை கொண்ட நீல நிற பறவை இலச்சினையையே இவ்வாறு ஏலத்தில் விடப்படவுள்ளது. இந்த இலச்சினை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது.

ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்துச் செலவுக்கும் சேர்த்து ஏலம் எடுப்பவர்கள் பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.

மார்ச் 20ஆம் திகதி வரை இந்த ஏலம் நடைபெறும் என்றும் அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இலச்சினை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin