• Tue. Jan 7th, 2025

24×7 Live News

Apdin News

தகவல் தொழில்​நுட்பம் மூலம் விவசாய உற்பத்தி மேம்பாடு: மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் | IIT Agreement for Agricultural Productivity Improvement

Byadmin

Jan 3, 2025


சென்னை: தகவல் தொழில்​நுட்ப வசதி மூலம் விவசாய உற்பத்​தியை மேம்​படுத்​தும் புதிய திட்​டத்தை செயல்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி புரிந்​துணர்வு ஒப்பந்தம் செய்​துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: தகவல் தொழில்​நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘விஸ்​டார்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்​படை​யில் செயல்​படுத்த உள்ளது.

இந்த திட்​டத்தை சிறப்பாக நடைமுறைப்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் மற்றும் விவசா​யிகள் நல அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான புரிந்​துணர்வு ஒப்பந்தம் டெல்​லி​யில் சமீபத்​தில் கையெழுத்​தானது. இந்த ஒப்பந்​தத்​தில் மத்திய வேளாண் அமைச்சக இணை செயலர் சாமுவேல் பிரவீன் குமார், சென்னை ஐஐடி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் ஆராய்ச்சி மையத்​தின் இயக்​குநர் ஏ.தில்​லைராஜன் கையெழுத்​திட்​டனர்.

தில்​லைராஜன் கூறும்​போது, “இந்திய சமூக, பொருளாதார வளர்ச்​சி​யின் முது​கெலும்பாக திகழ்வது விவசா​யம். அந்த வகையில் வேளாண் மற்றும் அதுசார்ந்த துறை​களில் புதிய கண்டு​பிடிப்புகளை கொண்டு வருவ​தில் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் முக்கிய பங்கு வகிக்​கும். இந்த புரிந்​துணர்வு ஒப்பந்தம் மூலம் வேளாண் தொடர்பான தகவல்கள் விவசா​யிகளை எளிதாக​வும், விரைவாக​வும் சென்​றடை​யும்” என்றார்.

இந்த புரிந்​துணர்வு ஒப்பந்தம் மூலம் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் வேளாண் சந்தை​யில் புதிய பொருட்​கள், புதிய சேவைகளைக் கொண்டு​வரும். வேளாண் மற்றும் அதுசார்ந்த துறை​களுக்கு தகவல் தொழில்​நுட்​பங்​களும், புதிய கண்டு​பிடிப்பு​களும் பல்வேறு வழிகளில் பயன் தரும்.

வேளாண் துறை​யில் ஏராளமான ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் உருவாகும். தகவல் தொழில்​நுட்ப வசதிகள் விவசா​யிகளை எளிதில் சென்​றடை​யும். விவசா​யிகள் மற்றும் அதுசார்ந்த துறை​களில் உள்​ளவர்​கள் ஸ்​டார்ட்​-அப் நிறு​வனங்​களின் ​திறன்​கள், சலுகைகள் குறித்து தெரிந்​து​கொள்ள ​முடி​யும். இவ்​வாறு அதில் கூறப்பட் டுள்ளது.



By admin