3
தங்கத்தின் விலை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது (நேற்று) 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்து 57,000 ரூபாவாகக் காணப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு நிகராக, இலங்கையின் தங்கத்தின் விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போது உலக சந்தையில் தங்க ஹவுன்ஸ் ஒன்றின் விலை 4,479 டொலர்களாகும். எவ்வாறிருப்பினும் நத்தார் பண்டிகையின் பின்னர் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026 இல் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
மிகக் குறுகிய காலத்துக்குள் தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.