• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

தங்கத்தை விட அரிதான நிலவின் பாறை மாதிரிகளை சீனா கடனாகக் கொடுத்தது ஏன்?

Byadmin

May 12, 2025


சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC News

படக்குறிப்பு, பூமியின் எந்த கலப்படமும் இல்லாமல் இந்த தூசிக் குப்பியை வைத்திருக்க வேண்டும்

நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிடம் இருந்து நிலவின் துகள் மாதிரிகள் பிரிட்டனுக்கு கடனாக வந்து சேர்ந்துள்ளன.

மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம்.

பேராசிரியர் மகேஷ் ஆனந்த் தான் இந்த அரிதினும் அரிதான பொருளைக் கடனாகப் பெற்றிருக்கும் ஒரே பிரிட்டன் விஞ்ஞானி. ‘தங்கத் துகள்களை விட மதிப்பு மிக்க பொருள் இது’ என்கிறார் அவர்.

“சீனாவின் மாதிரிகளை உலகில் யாரும் நெருங்க முடியாது. அவை இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம்,” என்கிறார் அவர்.

By admin