• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

தங்​க​பாண்​டிய​னுக்கு தடங்கல் ஏற்படுத்​துவாரா அண்ணாச்சி? – ரவுண்டு கட்டும் ராஜபாளையம் திமுக சர்ச்சைகள் | about rajapalayam dmk controversies was explained

Byadmin

Mar 29, 2025


ராஜபாளையம் திமுக எம்எல்ஏ-வான தங்கபாண்டியன் சமூக வலைதளத்தின் செல்லப்பிள்ளை. 2021-ல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியை தன்வசமாக்கிய தங்கபாண்டியன், இதுவரை தனக்கு தரப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கான ஊதியம் முழுவதையும், ஏழைப்பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவ உதவி உள்ளிட்ட சேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பவர்.

110 மாதங்களைக் கடந்தும் இந்த சேவையை விடாமல் தொடர்வதால் தான், சமூக வலைதளங்கள் தங்கபாண்டியனை கொண்டாடுகின்றன. ஆனால், அப்படிப்பட்டவருக்கு இம்முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா என்று சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

தனது சமூக சேவை​களால் திமுக தலை​மை​யின் அபி​மானத்​தைப் பெற்ற தங்​க​பாண்​டியன் ஒரு கட்​டத்​தில் மாவட்​டச் செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ரா​மச்​சந்​திரன் அண்​ணாச்​சி​யின் தயவின்​றியே தலை​மை​யிடம் தனக்​கானதை எல்​லாம் சாதித்​துக் கொண்​ட​தாகச் சொல்​வார்​கள்.

இது அண்​ணாச்சி வட்​டாரத்தை கொஞ்​சம் சுதா​ரிக்க வைத்​தது. அண்மையில் தனது மகனின் திரு​மணத்தை தூத்​துக்​குடி​யில் பிர​மாத​மாக நடத்​தி​னார் தங்​க​பாண்​டியன். நடத்தி வைத்​தவர் உதயநிதி ஸ்டா​லின். இதையெல்​லாம் பார்த்​து​விட்​டு, “விருதுநகர் தெற்கு மாவட்​டத்தை இரண்​டாகப் பிரித்து அண்​ணாச்​சி​யின் அதி​கார எல்​லை​யைக் குறைக்​கப் போகி​றார்​கள்.

வில்​லி​புத்​தூர், ராஜ​பாளை​யம் தொகு​தி​களை உள்​ளடக்​கிய புதிய மாவட்​டத்​துக்கு தங்​க​பாண்​டியனை செய​லா​ள​ராக்​கப் போகி​றார்​கள்” என்று செய்​தி​கள் சிறகடித்​தன. இது​வும் அண்​ணாச்சி வட்​டாரத்தை யோசிக்க வைத்த நிலை​யில், அப்​படியொரு மாவட்​டம் உரு​வா​னால் அதற்​கு, தன்னை மீறிப் போகாத ஒரு​வரை செய​லா​ள​ராக கொண்​டு​வ​ரு​வதற்​கும் அண்​ணாச்சி ஆயத்​த​மான​தாகச் சொல்​கி​றார்​கள். இதனிடையே, சமூகவலை​தளத்​தில் கொண்​டாடப்​படும் தங்​க​பாண்​டிய​னுக்கு எதி​ராக பொது​வெளி​யில் சிலர் குற்​றச்​சாட்​டு​களை​யும் அடுக்கி அவரது இமேஜை டேமேஜாக்க துணிந்​தார்​கள்.

ராஜ​பாளை​யம் நகராட்​சிக்​குள் தனக்கு விசு​வாச​மான கவுன்​சிலர்​களை வைத்​துக் கொண்டு ‘அனைத்​தி​லும்’ தலை​யிடு​கி​றார், கண்​மாய்​களில் விவ​சாய பயன்​பாட்​டுக்கு என அனு​மதி பெற்​று, செங்​கல் சூளைக்கு மண் அள்​ளிய​வர்​கள் குறித்து புகார் அளித்​தவரிடமே சமா​தானம் பேசி​னார், நகராட்சி பணி​களை தனது சமூகத்​தைச் சார்ந்த ஒரு​வ​ருக்கே ஒதுக்​கிட வலி​யுறுத்​துகி​றார் என தங்​க​பாண்​டிய​னுக்கு எதி​ராக பலவித​மாக குற்​றச்​சாட்​டு​களைக் கிளப்​பி​னார்​கள். கட்​சிக்​குள் சீனியர்​களை விட்​டு​விட்டு தனக்கு விசு​வாச​மான​வர்​களுக்கு பதவி​களை வழங்க சிபாரிசு செய்​த​தாக​வும் சர்ச்சை வெடித்​தது.

இப்​படி​யான சூழலில் தான் தங்​க​பாண்​டிய​னுக்கு மீண்​டும் ராஜ​பாளை​யத்​தில் வாய்ப்​புக் கிடைப்​பது சிக்​கல் தான் என்ற செய்​தி​யை​யும் சிலர் கசி​ய​விட்​டிருக்​கி​றார்​கள். “அண்​ணாச்​சி​யின் விருப்​பத்​துக்​குரிய நபராக தங்​க​பாண்​டியன் இப்​போது இல்​லை. அதனால் அவரது பெயரை இம்​முறை அண்​ணாச்சி டிக் பண்ண மாட்​டார். இது தெரிந்​து​தான் தங்​க​பாண்​டியன் இப்​போது ராஜ​பாளை​யம் நகராட்சி மீது முழுக்​கவனத்​தை​யும் திருப்பி இருக்​கி​றார். விரை​வில் ராஜ​பாளை​யம் நகராட்சி மாநக​ராட்​சி​யாக தரம் உயர​விருக்​கிறது.

அப்​படி உயர்த்​தப்​பட்​டால் மேய​ராகி செட்​டிலாகி​விடலாம் என்ற கணக்​கும் தங்​க​பாண்​டிய​னுக்கு இருக்​கிறது. அதனால் தான் ராஜ​பாளை​யம் நகராட்​சிக்​குள்​ளேயே வீடு​கட்டி குடியேறும் முயற்​சி​யில் இருக்​கும் அவர், ராஜ​பாளை​யம் நகரச் செய​லா​ளர் உள்​ளிட்ட ஒட்​டுமொத்த நகர திமுக-வை​யும் தனது கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​திருக்​கி​றார்” என்​கி​றார்​கள் ராஜ​பாளை​யத்து அரசி​யல்​வா​தி​கள்.

ராஜ​பாளை​யத்​தில் இந்த முறை​யும் நீங்​கள் தானே போட்​டி​யிடு​கிறீர்​கள் என தங்​க​பாண்​டிய​னிடம் கேட்​டதற்​கு, “இதே தொகு​தி​யில் மீண்​டும் நான் போட்​டி​யிடு​வது குறித்து முதல்​வர் ஸ்டா​லினும் அமைச்​சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆரும் தான் முடிவு செய்ய வேண்​டும். நான் தான் என்​றில்​லை…

இந்​தத் தொகு​தி​யில் தலைமை யாருக்கு வாய்ப்​பளித்​தா​லும் அவரை வெற்றி பெறவைப்​போம். விருதுநகர் மாவட்ட திமுக-​வானது அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு தலைமையிலேயே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்; அதுவே வெற்றிக்கான வியூகம்” என்றார்.



By admin