• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன? | Gold prices hit record high again

Byadmin

Sep 23, 2025


சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.84 ஆயிரத்தை நெருங்​கியது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்​து, ரூ.83,440 என்ற புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அதன் அடிப்​படை​யில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது.

கடந்த 20-ம் தேதி தங்​கத்​தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்​து,புதிய உச்​சத்தை தொட்​டது. தங்​கம் விலை மேலும் உயரும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.83 ஆயிரத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்​து, ரூ.83,440-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. விரை​வில் ரூ.84 ஆயிரத்தை எட்​டும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஒரு கிராம் தங்​கம் ரூ.140 உயர்ந்​து, ரூ.10,430-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் சுத்த தங்​கம் ரூ.91,024 ஆக இருந்​தது. இது​போல, வெள்ளி கிரா​முக்கு ரூ.3 உயர்ந்​து, ரூ.148 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1.48 லட்​ச​மாக​வும் இருந்​தது.

தங்​கம் விலை உயர்​வால், மக்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். சென்னை தங்​கம் மற்​றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செய​லா​ளர் எஸ்​.​சாந்​தக்​கு​மார் கூறுகை​யில், “அமெரிக்க பெடரல் வங்​கி, வட்டி விகிதத்தை குறைத்​துள்​ளது. இதனால், வங்​கி​யில் வைப்பு வைத்​திருந்​தோர் பார்வை தங்​கத்​தின் மீது திரும்​பி​யுள்​ளது. இதுத​விர, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, புவி​சார் அரசி​யல் நிச்​சயமற்ற தன்​மை​கள் ஆகிய​வற்​றால், தங்​கத்​தின் மீது முதலீடு அதி​கரித்​துள்​ளது. இதனால், விலை உயர்ந்​துள்​ளது. வரும் நாட்​களில் தங்​கத்​தின் விலை உயரவே வாய்ப்பு உள்​ளது” என்​றார்.



By admin