• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

தங்கம் விலைக்கும் டொனால்ட் டிரம்ப்க்கும் என்ன தொடர்பு? – உலகளாவிய வரிப்”போர்” வருகிறதா?

Byadmin

Apr 3, 2025


டொனால்ட் டிரம்ப், வரிவிதிப்பு, உலகப்பொருளாதாரம், இந்திய பொருளாதாரம், போட்டி வரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப்பின் அறிவிப்புகளை எதிர்நோக்கி உலகச்சந்தைகள் ஆட்டம் காணுகின்றன

புதிய வரிவிதிப்புகள் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்காக உலகம் முழுவதும் காத்திருக்கும் நிலையில், உலகளாவிய பங்குச் சந்தைகள் நிலையற்றதாக உள்ளன.

அமெரிக்காவில் பங்குச்சந்தைகளின் நேரம் முடிவடைந்ததும் மாலை 4 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு உலகநாடுகளுக்கான புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்கிறார். வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நடைபெற உள்ள இந்த அறிவிப்பு நிகழ்ச்சிக்கு “அமெரிக்காவை மீண்டும் செழிப்பாக மாற்றுவோம்” (Make America Wealthy Again) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்காவின் புதிய “விடுதலை தினம்” என்று குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.

புதிய வரிகள் அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடுகளை மட்டுமல்ல, “அனைத்து நாடுகளையும்” பாதிக்கக்கூடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

By admin