• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா? கடந்த ஓராண்டில் 60% விலையேற்றம்

Byadmin

Jan 28, 2026


தங்கம் விலை குறையுமா? ஓராண்டில் 60% விலையேற்றம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா? தங்கம் விலை உயர்வு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தங்கத்தின் விலை கடந்த ஒரு வருடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது. உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1035 கிராம்கள்) தங்கத்தின் விலை 5 ஆயிரம் டாலர் என்பதைத் தாண்டிவிட்டது. ஜனவரி 28ஆம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 14,960 ரூபாய். 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு காரட் 16,320 ரூபாய்.

ஓராண்டிற்கு முன்பாக, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை சுமார் 10,900 ரூபாயாக இருந்தது. 22 கேரட் தங்கம் சுமார் 10,000 ரூபாயாக இருந்தது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை சுமார் 5,820 ரூபாயாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் முதலீட்டு காரணங்களைத் தவிர்த்து ஆபரணமாகவும் திருமணங்களில் அளிக்கப்படுவதற்காகவும் தங்கம் பெருமளவில் வாங்கப்படும் நிலையில், இந்த விலை உயர்வு நுகர்வோரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபமடைந்துள்ளனர். ஆனால், புதிதாக முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில் உள்ளே நுழைவது சரியா என்ற கேள்வியும் இருக்கிறது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் (NATO) இடையே கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நிதி மற்றும் புவிசார் அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை குறித்த கவலைகளாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இது தவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளும் சந்தையைக் கவலையடையச் செய்துள்ளன.

கிரீன்லாந்து விவகாரத்தோடு தொடர்புடைய நாடுகளுக்கு விதிப்பதாக அறிவித்த இறக்குமதி வரியை கடந்த வாரம் அவர் ரத்து செய்தார். அதே நேரத்தில் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையாவது செய்துகொண்டால் அந்நாட்டின் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருக்கிறார். இம்மாதிரி கொந்தளிப்பான சூழலில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த உலோகங்களை பாதுகாப்பான ஒன்றாகக் கருதுகின்றனர்.

By admin