சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சுமோ’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கத்தில் உருவான ‘சுமோ’ திரைப்படத்தில் சிவா, பிரியா ஆனந்த், வி .டி.வி கணேஷ், யோகி பாபு, சேத்தன்,பெசன்ட் நகர் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோஷினோரி தஷிரோ எனும் ஜப்பானிய நடிகரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளரும் , நடிகருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுமோ என்னும் ஜப்பானிய வீர விளையாட்டை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியாகி, ஒன்பது மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாகி, அண்மையில் வெளியான ‘மதகஜராஜா’ படத்தின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து இப்படத்தினையும் தூசு தட்டிய படக் குழு, புதிய வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளது.
அத்துடன் ‘இந்த தடவை மிஸ் ஆகாது’ என்ற உத்தரவாதத்துடன் இப்படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
The post தடைகளை கடந்து வெளியாகும் சிவாவின் ‘சுமோ’ appeared first on Vanakkam London.