• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

தண்டுபாளையம் கொள்ளைக் கும்பல் பாணியில் ‘பண்ணை வீட்டுப் படுகொலைகள்’- அச்சத்தில் கொங்கு மண்டலம்

Byadmin

May 3, 2025


தண்டுபாளையம் கும்பல், குற்றம், கொலை, கோயம்புத்தூர்
படக்குறிப்பு, கொலை நடந்த, இராமசாமிக்கு சொந்தமான தோட்டத்து வீடு

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்துவீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில், கொங்கு மண்டலத்தில் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து நடத்தப்படும் தொடர் கொலைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடந்த தண்டுபாளையம் பாணி கொலைகளைச் சுட்டிக்காட்டும் முன்னாள் காவல்துறை அதிகாரி, இது ஒரே கும்பலால் நடத்தப்படும் தொடர் குற்றங்களாக இருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறார்.

தனியாக இருக்கும் விடுகள் இந்த கும்பல்களால் குறிவைக்கப்படுவது எப்படி? காவல்துறையினர் கடந்த காலங்களில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து காணலாம்.

மூன்று நாட்களாக பேசாததால் வந்த சந்தேகம்

இந்த கொலை தொடர்பான சிவகிரி காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், “ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் இராமசாமி (வயது 75), இவரது மனைவி பாக்கியம்மாள் (65) இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி, விவசாயம் செய்து வந்தனர்.

By admin