• Sat. Oct 11th, 2025

24×7 Live News

Apdin News

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Byadmin

Oct 11, 2025


நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக தண்ணீர் போத்தலை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 06 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By admin