• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

தந்தையின் உடலை 2 வருடங்களாக மறைத்து வைத்த மகன்

Byadmin

Apr 27, 2025


ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்ற நபர், கடந்த ஒரு வாரமாக தான் நடத்தி வந்த சீன உணவகத்தை திறக்காத நிலையில், அக்கம் பக்கத்தினர், பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து, அவரது வீட்டில் நடத்திய சோதனையில் அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், என்றும், அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக அவர் தெரிவித்தார்.

ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் ஆகும் என்பதால், அவர் தனது தந்தையின் உடலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், தனது தந்தையின் ஓய்வூதியத்தை 2 ஆண்டுகளாக பெற்று வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

By admin