• Sun. Dec 28th, 2025

24×7 Live News

Apdin News

‘தந்தையைப் பழிவாங்க 5 வயது மகன் கடத்தல்’ – அன்னூர் போலீசாரிடம் அசாம் கும்பல் சிக்கிய பின்னணி

Byadmin

Dec 28, 2025


கோவை, அன்னூர், குழந்தை கடத்தல்

பட மூலாதாரம், Annur Police

‘தங்களின் ஐந்து வயது மகனைக் காணவில்லை’ என, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்-பர்வீன் தம்பதி கோவை, அன்னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது டிசம்பர் 25-ஆம் தேதி நேரம் மாலை 7.30 மணி.

‘சம்பள பாக்கியைத் தரவில்லை’ எனக் கூறி மகனைக் கடத்தியதோடு தனது செல்போனையும் சிலர் எடுத்துச் சென்றுவிட்டதாக டிசம்பர் 25-ஆம் தேதி அளித்த புகார் மனுவில் இம்ரான் கூறியிருந்தார்.

“குழந்தைக் கடத்தல் என்றவுடன் எங்களுக்குப் பதற்றம் ஏற்பட்டது. கேரள போலீசின் உதவியோடு புகார் கொடுத்த மூன்று மணிநேரத்திலேயே சிறுவனை மீட்டுவிட்டோம்” என்கிறார், அன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் செல்வம்.

இந்த வழக்கில் அசாமைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் குழந்தைக் கடத்தல் மற்றும் திருட்டு ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தெலுங்குபாளையத்தில் இயந்திர உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

By admin