6
மத்திய இலண்டனில் தந்தை மற்றும் மகனைக் கொலை செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை 28ஆம் திகதி பெர்மண்ட்ஸியின் லாங் லேனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கத்தியால் குத்தப்பட்டு, ப்ரோம்லியின் சிஸ்லேஹர்ஸ்ட்டைச் சேர்ந்த 58 வயதான டெர்ரி மெக்மில்லன் மற்றும் அவரது மகன் 27 வயதான பிரெண்டன் மெக்மில்லன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
பிரெண்டன் மெக்மில்லன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
அத்துடன், கத்திக்குத்து காயங்களுக்கு நான்கு பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாக பெருநகர பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாக்னியின் மவுண்ட் ப்ளசண்ட் லேனைச் சேர்ந்த 31 வயதான ஹசன் செவிக், ஜூலை 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
செவிக் சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.