3
தனது நண்பருடன் இமயமலை ஏறிய இங்கிலாந்து சுற்றுலாப் பயணி ஒருவர் மலையில் இருந்து தவறி விழுந்து மரணித்துள்ளார்.
குறித்த இங்கிலாந்து பயணிகள் இருவரும் கரடுமுரடான பாதையில் சென்றுகொண்டிருந்ததாகவும் அப்போது ஒருவர் கீழே விழுந்து கடுமையாக காயமுற்றதாகவும் உள்ளூர் அவசரச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
காயமடைந்த இங்கிலாந்து பயணி மீட்கப்பட்டு, மலைக்குக்கீழ் கொண்டுவரப்பட்டார். அவர் மருத்துவமனையை அடையும்போது கிட்டத்தட்ட 24 மணி நேரமாகிவிட்டது. அங்கு அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
“இந்தியாவில் மரணித்த இங்கிலாந்து பிரஜையின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறோம். உள்ளூர் அதிகாரிகளோடு தொடர்பில் இருக்கிறோம்” என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்தது.