• Sat. Mar 21st, 2026

24×7 Live News

Apdin News

‘தனிச்சின்னம் தான்.. உதயசூரியன் வேண்டாம்’ : தி.மு.க அழுத்தத்தை தவிர்க்கும் கட்சிகள் – தொகுதிப் பங்கீட்டில் என்ன சிக்கல்?

Byadmin

Mar 21, 2026


 திமுக, கூட்டணி கட்சிகள், அரசியல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம், MNM/Facebook

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பத்து தொகுதிகளில் போட்டியிட்டோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் நெருக்கடி இருந்ததால் ஆறு இடங்களைப் பெற்றோம். இந்தமுறை வலிமைக்கேற்ப ஒதுக்க வேண்டும் எனக் கூறிவிட்டோம்” என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி.

‘தி.மு.க கூட்டணியில் ஒதுக்க உள்ள இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுகின்றனர். இதனைக் கட்சித் தலைமை ஏற்கவில்லை’ என, மக்கள் நீதி மய்யம் கூறுகிறது.

‘ஆறு தொகுதிகளுக்குக் குறைவாகப் பெற மாட்டோம்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக, த.வா.க அறிவித்துள்ளது. அந்தவகையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறதா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருமாத காலம் அவகாசம் இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தி.மு.க தலைமை கவனம் செலுத்தி வருகிறது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

By admin