• Sun. Oct 13th, 2024

24×7 Live News

Apdin News

தனிநபர் நிதி: திடீரென வேலை போய்விட்டால் எப்படி சமாளிப்பது? – 10 நிதி ஆலோசனைகள்

Byadmin

Oct 13, 2024


தனிநபர் நிதி: திடீரென வேலை போய்விட்டால் எப்படி சமாளிப்பது - 10 நிதி ஆலோசனைகள்

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ், முன்னணி ஐடி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்தார். அவர் சுமார் 15 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி மேலாளர் நிலைக்கு உயர்ந்தார். சம்பளம் உயர்ந்து, ஆண்டுக்கு ரூ.30 லட்சம் என்ற நிலையை எட்டினார்.

திருமணம், குழந்தைகள், படிப்பு, வாழ்க்கை முறை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. நகரின் புறநகர் பகுதியில் ஒரு வில்லா (பங்களா), ஒரு கார், ஒரு வீட்டு மனை என வாங்கிக் குவித்தார். இவை அனைத்திற்கும் ஆகும் செலவுகள், இஎம்ஐகள் மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரை ஆனது.

எல்லாம் சுமூகமாகச் செல்வதாக நினைத்த கணேஷுக்கு, அவர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அலுவலகத்தில் பணியாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்புவதால், அவர் தனது வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார். இந்த திடீர் அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்கும் இதைத் தனது குடும்பத்தாரிடம் கூறுவதற்கும் வெகுகாலம் ஆனது.

By admin