• Wed. Nov 5th, 2025

24×7 Live News

Apdin News

தனியார் நிறுவனங்கள் மூலமாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியம் அனுமதி | Electricity Board allows private companies to implement green power generation projects

Byadmin

Nov 5, 2025


சென்னை: தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக பசுமை மின் உற்​பத்தி திட்​டங்​களை செயல்​படுத்த மின்​வாரி​யத்​துக்​கு, மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் காற்​றாலை, சூரியசக்தி மின் நிலை​யங்​கள் அமைக்க சாதக​மான காலநிலை உள்​ளது. தனி​யார் நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்​டும் நிலை​யில், மின்​வாரி​யம் அந்த பணி​யில் மெத்​தனம் காட்டி வந்​தது. கடந்த ஆண்​டில், மின்​வாரி​யத்​தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறு​வனம் துவக்​கப்​பட்​டது.

இந்​நிறு​வனம், தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக, பசுமை மின் திட்​டங்​களை செயல்​படுத்​தும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளது. இதற்கு தற்​போது, மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​ய​மும் அனு​மதி அளித்​துள்​ளது. அதன்​படி, திரு​வாரூர், கரூரில் தலா, 15 மெகா​வாட் திறனில் சூரியசக்தி மின் நிலை​யங்​கள், துாத்​துக்​குடி, மதுரை, கன்​னி​யாகுமரி​யில், 16 மெகா​வாட் திறனில் சூரியசக்தி மற்​றும் 19 மெகா வாட் திறனில் காற்​றாலை மின் நிலை​யங்​களும், கோவை உள்​ளிட்ட ஏழு இடங்​களில், 375 மெகா​வாட் திறனில், மின்கல ஆற்​றல் சேமிப்பு (பேட்​டரி ஸ்டோரேஜ்) போன்ற திட்​டங்​களை செயல்​படுத்த, மின்​வாரி​யத்​திற்​கு, தமிழக மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது.

இதுகுறித்​து, மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: திரு​வாரூர் மாவட்​டம், திருத்​துறைப்​பூண்டி மற்​றும் கரூர் மாவட்​டம், வெள்​ளியணை​யில் தலா, 15 மெகா​வாட் திறனில் சூரியசக்தி மின்​நிலை​யங்​கள் மற்​றும் அவற்​றில் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை மூன்று மணி நேரத்​துக்கு சேமித்து வைத்​து, மீண்​டும் பயன்​படுத்​தும் வகை​யில், மின்கல ஆற்​றல் சேமிப்பு கட்​டமைப்பை உரு​வாக்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

துாத்​துக்​குடி​யில் கயத்​தாறு, மதுரை புளி​யங்​குளம், கன்​னி​யாகுமரி முப்​பந்​தலில், 16 மெகா​வாட் திறனில் சூரியசக்​தி, 18.75 மெகா​வாட் திறனில் காற்​றாலை மின்​நிலை​யங்​களை, தனி​யார் நிறு​வனம் வாயி​லாக அமைக்க அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. திருப்பூர் மாவட்​டம் பல்​லடம் துணை மின்​நிலை​யத்​தில், 25 மெகா​வாட், புதுக்​கோட்​டை​யில் 25, புதுக்​கோட்டை தச்​சங்​குறிச்​சி​யில் 50, திரு​வாரூரில் 50, கோவை காரமடை​யில் 75, தேனி தப்​பகுண்​டில் 50, திருப்​பூர் ஆணை​கட​வில் 100 மெகா​வாட் என, 375 மெகா​வாட் பசுமை மின்​சா​ரத்​தை, நான்கு மணி நேரத்​துக்கு சேமித்​து, மீண்​டும் பயன்​படுத்​தும் வகை​யில், மின்கல ஆற்​றல் சேமிப்பு திட்​டத்தை செயல்​படுத்​த​வும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டங்​கள், தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக செயல்​படுத்​தப்பட உள்​ளன. அதன்​படி, பசுமை எரிசக்தி கழகம், டெண்​டர் கோரி திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டும். ஆணை​யம் அனு​மதி அளித்​ததை அடுத்​து, தகு​தி​யான நிறு​வனங்​களை தேர்வு செய்ய, விரை​வில் டெண்​டர் கோரப்​பட​வுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.



By admin