• Thu. Jun 5th, 2025

24×7 Live News

Apdin News

தனுஷ் நடிக்கும் ‘குபேரா ‘படத்தின் புதிய பாடல் வெளியீடு

Byadmin

Jun 4, 2025


தென்னிந்திய திரையுலகின் மின்னும் நட்சத்திர கலைஞர்களான தனுஷ் – நாகார்ஜுனா – ரஷ்மிகா மந்தானா – ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘குபேரா’ திரைப்படத்தில் இடம் பெற்ற கத கத கத..’ எனத் தொடங்கும் பாடலும் ,பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குபேரா ‘ திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தானா, ஜிம் ஷெர்ப், தலீப் தஹீல், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

பணத்தை பற்றிய தேடலும் வாழ்க்கை பற்றிய தேடலும் ஒரு புள்ளியில் இணையும் அதிசயத்தை நிகழ்த்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி நிறுவனம் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் இடம்பெற்ற ‘ கத கத கத…’ எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, பின்னணி பாடகர்கள் ஹைடு கார்த்தி மற்றும் கரிமுல்லா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலத்தேய தாள லயத்தின் பின்னணியில் வாழ்க்கையை பற்றிய நுட்பங்களை விவரிக்கும் பாடலாக உருவாகி இருக்கும் இதனை இசை ரசிகர்கள் கொண்டாடி, ரசித்து வருகிறார்கள்.

By admin