• Thu. Oct 16th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தின் கடன் ரூ. 9.21 லட்சம் கோடியாக உயர்ந்ததன் பின்னணி – தங்கம் தென்னரசு விளக்கம் | We are paying interest on the loan taken during the AIADMK regime Thangam Thennarasu speech

Byadmin

Oct 16, 2025


சென்னை: 2020- 21 ஆட்சிக்காலத்தின் முடிவில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கு 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி மட்டும் தாங்கள் கட்டிக்கொண்டிருப்பதாகவும், மத்திய அரசு வரிப்பங்கீட்டை முறையாக வழங்கினாலே தமிழகத்தின் கடன் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு குறையும் என்றும் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு, “2020- 21 ஆட்சிக்காலத்தின் முடிவில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கு 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி மட்டும் நாங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம். 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் தொடக்கத்தில் தமிழகத்தின் கடன் 1 லட்சத்து ஆயிரத்து 349 கோடி ரூபாயாக இருந்தது, அந்த ஆட்சி முடியும் போது 2015-16ல் தமிழகத்தின் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 66 கோடி ரூபாயாக உயர்ந்தது, அதாவது கடன் 108 சதவீதம் உயர்ந்தது.

அடுத்ததாக 2016-17 ல் இருந்து 2020-21 வரையிலான அதிமுக ஆட்சிகாலம் முடியும்போது தமிழகத்தின் கடன் 4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உயர்ந்தது, அதாவது 128 சதவீதம் உயர்ந்தது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தின் கடன் இப்போது 9 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது 93 சதவீதம்தான். தமிழகத்தின் கடன் வளர்ச்சி 128 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது அதிமுக ஆட்சியில்தான். எனவே கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை.

தமிழகத்தின் கடன் வளர்ச்சிக்கு அரசின் நிதி நிர்வாகம் காரணமல்ல. இப்போது அதிமுக கூட்டணி சேர்ந்துள்ள மத்திய பாஜக ஆட்சி தமிழகத்தின் மீது மாற்றந்தாய் மனப்பான்மையோடு செயல்படுவதுதான் காரணம். 5வது நிதிக்குழுவின் பரிந்துரையில் இருந்து தற்போதைய 14வது நிதிக்குழு பரிந்துரை வரை மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்கு 32 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. மத்திய அரசு வரிப்பங்கீட்டை முறையாக வழங்கினாலே தமிழகத்தின் கடன் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு குறையும்” என தெரிவித்தார்.



By admin