• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகில் சென்ற 9 அகதிகள் கைது | 9 refugees who illegally traveled by boat from Tamil Nadu to Sri Lanka arrested

Byadmin

Nov 10, 2024


ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக படகில் சென்ற குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 9 அகதிகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு அருகே பாக் ஜலசந்தி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்திற்குரிய முறையில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்படகை படகை சோதனை செய்தனர். அதில் 4 குழந்தைகள் 2 பெண்கள் 3 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் இருந்தனர். பின்னர் நாட்டுப் படகை கைப்பற்றிய இலங்கை நெடுந்தீவிற்கு கொண்டு சென்று அங்குள்ள போலீஸாரிடம் 9 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

நெடுந்தீவு போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த விது ஸ்திகா (13), அஜய் (12), ஜித்து (12) அபிநயா (03), சுதா (38), ஞான ஜோதி (46), மகேந்திரன் (50) பூவேந்திரன் (54) தீபன் (25) எனவும், ஒரு நாட்டுப்படகை சொந்தமாக வாங்கி அதன் மூலம் இலங்கைக்கு வர முயன்றது தெரிய வந்துள்ளது. மண்டபம் முகாமில் தங்கியிருந்த அகதிகளுக்கு நாட்டுப்படகை வாங்கிக் கொடுத்தது யார், இலங்கைக்கு படகில் செல்ல உதவியவர்கள் குறித்தும், மண்டபம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



By admin