• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 74 இலட்சம் பெயர்கள் நீக்கம்!

Byadmin

Feb 24, 2026


தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 இலட்சமாக அதிகரித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்களை உள்ளடக்கிய 2026ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23) வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலின்படி, தற்போது தமிழகத்தில் மொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கடந்த 2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய பட்டியலின் படி, 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 12.51 லட்சமாகவும், மாற்றுத் திறனாளிகள் என பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 4.63 இலட்சமாகவும் உள்ளனர். இதேபோல், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் 3.99 இலட்சம் பேர் இருப்பதாக இந்திய தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

By admin