• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்

Byadmin

Nov 26, 2025


இந்​நிலை​யில், 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆட்​சிக்கு வந்​தால், மூன்​றரை லட்​சம் அரசுப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என்று திமுக வாக்​குறுதி அளித்​திருந்​தது. இதனால் அதிக காலிப்​பணி​யிடங்​களுக்கு போட்​டித் தேர்வு நடை​பெறும் என்று தமிழக இளைஞர்​கள் எதிர்​பார்த்த நிலை​யில், 2 ஆண்டு கரோனா இடை வெளிக்​குப் பிறகு, 2022-ம் ஆண்டு நடை​பெற்ற குரூப்-4 தேர்​வில் வெறும் 10,300 பணி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​படும் என்று திமுக அரசு அறி​வித்து ஏமாற்​றியது.

மேலும், 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்​தாமல் போட்​டித் தேர்​வர்​கள் வயிற்​றில் அடித்​தது. இதைத் தொடர்ந்​து, 2024-ம் ஆண்டு நடை​பெற்ற குரூப்-4 தேர்​வில் வெறும் 9,532 காலிப்​ பணி​யிடங்​களை மட்​டுமே நிரப்பி வஞ்​சித்​தது. இந்​நிலை​யில் ஆட்சி முடி​யும் கடைசி ஆண்​டில், இது​வரை இல்​லாத அளவுக்கு மிகமிகக் குறைந்த அளவாக 3,945 பணி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்​படும் என்று அறி​வித்து திமுக அரசு அதிர்ச்​சி​யளித்​தது.

By admin