0
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் எதிர்வரும் 17ஆம் திகதி பாரிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு, த.வெ.க. தலைவர் விஜய்க்கு டொக்டர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தை அன்புமணி சார்பில், த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு பனையூர் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.
இது குறித்து வழக்கறிஞர் பாலு அளித்த பேட்டியில், “த.வெ.க. முதல் மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அமைப்பாக த.வெ.க. இருக்கிறது. திராவிட இயக்கங்களுக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் த.வெ.க. கருத்து அமைந்துள்ளது.
எனவே, இந்தப் போராட்டத்தில் த.வெ.க. கலந்துகொள்ள நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம் எனக் கூறினார்.
இதையடுத்து பா.ம.க. போராட்டத்தில் த.வெ.க. பங்கேற்குமா என த.வெ.க. தரப்பில் நிர்வாகி ரகுவிடம் கேட்டபோது, பா.ம.க. போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.விற்கு வந்த அழைப்பு கடிதத்தை கட்சி தலைவர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம்.
கட்சி தலைவர் விஜய், பா.ம.க. கடிதம் குறித்து பரிசீலித்து த.வெ.க. பங்கேற்பது பற்றி முடிவு செய்வார் என்று கூறினார்.