• Tue. Sep 2nd, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | imd predicts chance for rain till september 7 in state

Byadmin

Sep 2, 2025


சென்னை: தமிழகத்​தில் செப்​.7-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

வடக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் செப்​.2-ம் தேதி (இன்​று) காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்​றும், நாளை​யும் வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், தென்​தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். செப்.4 முதல் 7-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக மதுரை மாவட்​டம் கள்​ளந்​திரி​யில் 6 செ.மீ, புதுச்​சேரி​யில் 5 செ.மீ, மதுரை மாவட்​டம் பெரியபட்​டி, சென்னை பெரம்​பூர், ஐஸ் ஹவுஸ், விழுப்​புரம் மாவட்​டம் மரக்​காணம் ஆகிய இடங்​களில் தலா 4 செ.மீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்டுள்ளது.



By admin