• Sun. Sep 7th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Heavy rain likely in 8 districts of Tamil Nadu today

Byadmin

Sep 7, 2025


சென்னை: தமிழகத்​தில் திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இன்று (செப்​.7) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக இன்று வட தமிழகத்​தில் சில இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழகத்​தில் சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. வரும் 11, 12-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி,விழுப்​புரம், கடலூர், மயி​லாடு​துறை, திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர் மாவட்​டங்​களி​லும். நாளை ராம​நாத​புரம், சிவகங்​கை,புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்​களி​லும், வரும் 9-ம் தேதி கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்​டுக்​கல், மதுரை, சிவகங்​கை, ராணிப்​பேட்​டை, வேலூர், திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும்,10-ம் தேதி சேலம், நாமக்​கல், மதுரை, திருச்​சி, ராணிப்​பேட்​டை, வேலூர், திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல் பகு​தி​கள் மற்​றும் மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக செங்​கல்​பட்டு மாவட்​டம் மாமல்​லபுரத்​தில் 5 செ.மீ., தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம், மயி​லாடு​துறை மாவட்​டம் கொள்​ளிடம், மணல்​மேடு, செங்​கல்​பட்டு மாவட்​டம் திருக்​கழுக்​குன்​றம், நீல​கிரி மாவட்​டம் பந்​தலூர், விண்ட்வொர்த் எஸ்​டேட், கோவை மாவட்​டம் சின்​னக்​கல்​லாறு ஆகியஇடங்​களில் 4 செ.மீ. மழை பதி​வாகிஉள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin