• Thu. May 8th, 2025

24×7 Live News

Apdin News

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்: அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு | Portfolio change in TN cabinet: Law department allotted to Durai Murugan

Byadmin

May 8, 2025


சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை மற்றும் கனிமம் மற்று சுரங்கத் துறை அமைச்சராக துரைமுருகனும், சட்டத்துறை அமைச்சராக எஸ்.ரகுபதியும் இருந்து வந்தனர். இந்நிலையில், அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறையுடன் சேர்த்து இனி சட்டத்துறையையும் அவர் கவனித்துக் கொள்வார். அதேநேரம், அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைப்படி அமைச்சரவை இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.

அண்மையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே.பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



By admin