• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதல் ஈட்டிய விடுப்பு வரை: முதல்வரின் அறிவிப்புகள் | MK Stalin rolls out important announcements for TamilNadu government staffs

Byadmin

Apr 28, 2025


சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவை இன்று (ஏப்.28) காலை கூடியதும் முதல்வர் ஸ்டாவில் விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வரும் செப்டம்பருக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு: >> கரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை சரண்டர் செய்துவிட்டு 1-4-2025 முதல் பணப்பயன் பெற்றுக்கொள்ளலாம்.

>> 2.1-1-2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

>> அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைப்படி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் உயர்த்தப்படும். இதனால், 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

>> அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழில் கல்விக்கு ரூ.1 லட்சமாகவும், கலை – அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.

>> அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

>> பொங்கல் பண்டிகைக்கு சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பரிசு தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படும்.

>> ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படுகிறது.

>> பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு 9 மாதங்களுக்குள் அதாவது, செப்டம்பர் 30-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

>> பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு அவர்களின் பதவி உயர்வை பாதிக்காத வகையில் மகப்பேறு விடுப்பு காலமும் தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.



By admin