• Tue. Oct 14th, 2025

24×7 Live News

Apdin News

தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி | TN Assembly session begins: Condolence resolution on Karur Stampede incident passed

Byadmin

Oct 14, 2025


சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது.

இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

முன்னதாகம் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து மற்ற கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்றார். பின்னர், அப்பாவு கூறுகையில், “அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டப்பேரவைக் கூட்டம் அக்.14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்.” என அறிவித்தார்.

பரபரப்பான அரசியல் சூழலில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவதால் இக்கூட்டத்தொடரின் மீது எதிர்பாப்பு கூடியுள்ளது.



By admin