• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

தமிழக டிஜிபி நியமன தாமதத்தில் உள்நோக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு | Internal motive behind delay in DGP appointment: EPS

Byadmin

Aug 24, 2025


திருச்சி: மத்​திய அரசுக்கு பரிந்​துரை பட்​டியல் அனுப்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், தமிழக டிஜிபி நியமனத்​தில் உள்​நோக்​கம் இருப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் விலை​வாசி உயர்ந்​த​போது, விலை கட்​டுப்​பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்​கி, குறைந்த விலை​யில் பொருட்​களை கொள்​முதல் செய்​து, கூட்​டுறவு சங்​கங்​கள் மூலம் மக்​களுக்​குக்கொடுத்​தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்​கள் பாது​காக்​கப்​பட்​டனர். ஆனால், திமுக ஆட்​சி​யில் விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்​த​வில்​லை.

கர்​நாடக காங்​கிரஸ் அரசு கொடுத்த வாக்​குறு​தி​களை இரண்டே மாதத்​தில் நிறைவேற்​றி​யுள்​ளது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்றவில்லை. தமிழக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக. 30-ல் ஓய்​வு​பெறுகிறார். ஆனால், அடுத்த டிஜிபிக்​கான பெயர்ப் பட்​டியலை தமிழக அரசு இது​வரை மத்​திய அரசுக்கு அனுப்​ப​வில்​லை. இதில் ஏதோ உள்​நோக்​கம் இருக்​கிறது. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்து கிடக்​கிறது. கடந்த 6 மாதத்​தில் 6 காவலர்​கள் கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திமுக ஆட்​சி​யில் 67 சதவீதம் மின் கட்​ட​ணம் உயர்ந்​துள்​ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளன. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனத்து வரி​களை​யும் 100 சதவீதத்​துக்கு மேல் உயர்த்​தி​விட்​டனர்.

மேலும், 4 ஆண்​டு​களில் ரூ.4.38 லட்​சம் கோடி கடன் வாங்கி உள்​ளனர். கடன் வாங்​கிய​தில் இந்​தி​யா​விலேயே தமிழகம்​தான் முதலிடம் பெற்று சாதனை படைத்​துள்​ளது. அடுத்து அதி​முக ஆட்சி அமைந்​ததும் தாலிக்கு தங்​கம் திருமண உதவித் திட்​டம் மீண்​டும் கொண்டு வரப்​படும். மணப்​பெண்​ணுக்கு பட்​டுச் சேலை, மணமக​னுக்கு பட்டு வேஷ்டி வழங்​கப்​படும். எனவே, வரும் தேர்​தலில் அதி​முகவை வெற்றி பெறச் செய்ய மக்​கள் ஆதரவு தர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். முன்​னாள் அமைச்​சர்​கள் தங்​கமணி, சி.​விஜய​பாஸ்​கர் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.



By admin