• Sun. Jan 26th, 2025

24×7 Live News

Apdin News

தமிழரசுக் கட்சி வரவேற்பு! – இந்தியாவுக்கு நன்றியும் தெரிவிப்பு

Byadmin

Jan 25, 2025


யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதையும் வரவேற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்தியாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்று அமைக்கப்பட்டு “யாழ்ப்பாணம் கலாசார நிலையம்” என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் தூதுவர் மற்றும் இலங்கையின் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து இதன் பெயரை மாற்றம் செய்தனர்.

அதாவது யாழ்ப்பாணம் என்ற சொல்லைத் தூக்கிவிட்டு “திருவள்ளுவர் கலாசார மையம்” என்ற புதிய பெயரை அறிவித்து இருந்தனர். ஆனால், இதற்குப் பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி மீள்பலிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என்பதாக மீண்டும் பெயரை மாற்றியுள்ளனர். அதேபோல் தமிழுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டும் இருக்கின்றது.

இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நன்றி கூறி யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளிக்குத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் கடிதமொன்றையும் இன்று அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin